யதார்த்த மனைவி

எந்தன் வாழ்வில் நீ வந்ததுதான் எனக்கு
மிக்க மகிழ்ச்சியடா...

எந்தன் இவ்வாழ்க்கை உன்னோடு பாதியில்
தொடங்கிய உறவுதானடா...

இனியெல்லாம் முழுமையாய் உன்னுடனே
தொடரத்தான் தோனுதடா...

யாவும் உன்னோடுதான் பகிர தோனுதடா...

ஊசித்துரலிலே உன்னோடு கைகோர்த்து வெகுதூரம்
நடக்கத் தோனுதடா...

உந்தன் ஒருநாள் பிரிவில்கூட என்மனம்
உன் வருகைக்காய் ஏங்குதடா...

நீ பேசும் தருணம் எல்லாம் அதை
மெய்மறந்து கேட்க தோனுதடா...

உன்னோடு சண்டை நாட்களிலே என்மனம்
தூங்க மறுக்குதடா ....

நீ பேசாத நாட்களில் எல்லாம் என்மனம்
தங்க முடியவில்லையடா...

உந்தன் பயிற்சி, முயற்சிகளில் என்பங்கு
முழுமையாய் உனக்கடா...

எந்த நிலையிலும் உன்னோடு இசைந்திருப்பேனடா...

எந்தன் அன்பு முத்தமெல்லாம் எப்போதும்
உனக்குதானடா...

உந்தன் சோக, துக்கங்களில் என்மடி
உனக்குதானடா ...

எந்த சூழலிலும் என்னை விடுத்து
பிரிய வேண்டாமாடா...

எழுதியவர் : அருண் (1-May-14, 8:37 pm)
பார்வை : 91

மேலே