தாய்மை

அன்பின் அடையாளமாய்

ஆசையாய் கருவில் உருவாக்கி

இரு ஐந்து மாதங்கள் சுமந்து

ஈ எறும்பு அண்டாது காத்து

உறக்கமின்றி உயிர் வளர்த்து

ஊராரும் உறவும் மெச்சிட

எண்ணம் முழுவது என்னை ஏற்றி

ஏணிப்படியாய் இருந்துதவி

ஐயங்கள் அத்துணையும் போக்கி

ஒற்றுமையாய் வாழ் கற்று தந்து

ஓசையில்லாமல் ஓடாய் உழைத்து

நான் உயர்ந்திட வழி வகுத்த

என் அன்னையின் அன்புக்கு

ஔடதமாய் எதை நான்

ஈடேன்பேன் .....?

உயிரெழுத்தை சேர்த்தாலும்

மெயெழுத்தை கோர்த்தாலும்

அம்மா என்னும்

ஒற்றைச் சொல்லுக்குள்

அடக்க முடியாதது

உன் பாசம் ...........

அது மட்டுமா .....

வயிற்றில் நான் உதைக்கும்போது

வலி ஏற்பட்டாலும்

உன் பிள்ளை குறும்பு செய்வதாய்

பெருமைபட்டுக் கொண்டாய் ...

சிறுவயதில் சிறுபிள்ளையாய்

நான் செய்த தவுறுகளை

சிரிப்போடு சிலாகித்தாய் ....

பள்ளிபருவத்தில்

நான் பாடாய்படுத்தினாலும்

பக்குவமாய் பாசம் காட்டி

பண்பு வளர்த்தாய் ...

வயதில் வாலிப வலையில்

நான் வீழ்ந்து பொது

பொறுப்போடு தூக்கி விட்டாய் ....

என் வாழ்க்கை பாதையில்

கைபிடித்து காலம் நகர்த்தி

கரை சேர்த்தாய் .....

மூலோகமும் தேடி

காணக் கிடைக்காத முத்து என்றாய்

முத்தை உருவாக்கிய

சிப்பி நீ என்பதை மறந்தாய்

எதையும் அளவோடு

நிறுத்திக்கொள் என்றாய் ...

இருந்தும் பேராசைக்காரி ஆனேன் ...

உன் அன்பை பெறுவதில் மட்டும் ..

இப்பிறவியில் மட்டுமல்ல

ஏழேழு பிறவியிலும்

உன் மகளாய்

வளர்ந்து வாழும்

வரம் வேண்டும் ....

என் அன்பு அன்னையே

தாயுள்ளம் கொண்ட

அனைத்து அன்னைகளுக்கும்

அன்னையர் தின வாழ்த்துக்கள்......!!!!!!

எழுதியவர் : ஏழிசைவாணி (10-May-14, 10:29 pm)
Tanglish : thaimai
பார்வை : 233

மேலே