உன் நினைவுகளுடன் நான் தனிமையில் 555

என்னழகே...

கருவேலன்காட்டிலே காதல்
கவிதை எழுதினேன்...

உனக்காக...

கள்ளி செடியிலே
உன் பெயரையும்...

என் பெயரையும்
எழுதினேன்...

மற்றவர்கள் காணுமுன்னே
நானே அழித்தேன்...

மழையின் ஈரம்
காயுமுன்னே...

ஈர மணல்
பரப்பில்...

உன் பெயரையும்
என் பெயரையும் சேர்த்தேன்...

மழைத்துளிகள்
நனைகாமளிருக்க...

இலைகளால் மூடினேன்...

வெயிலும் மழையும்
ஒரே நேரத்தில்...

நான் கை நீட்டி
ரசித்தேனடி நனைந்தபடி...

நம் பெயர்
நனையாதபடி...

கரிசல் காட்டில் பூத்த
மூக்குத்தி பூக்களை...

கையில் கொண்டு
ரசித்தேன்...

நீ அணிவதாக
நினைத்து...

உன் ஒற்றை
மூக்குத்தி நினைவில்...

கரிசல் கட்டின் ஒற்றை
பனைமரத்தடியில்...

கால் கடுக்க
காத்திருக்கிறேன்...

நாம் சந்தித்த
முதல் சந்திப்பு...

மீண்டும்
வருமா என்று...

பனை ஓலையின்
சரசரக்கும் ஓசையில்...

உன் கொலுசின்
ஓசை கேட்குதடி...

பனை ஓலை
நிழலை கண்டால்...

உன் கூந்தல் அசைவதை
எண்ணி ரசிகிறேனடி...

கரிசல் கட்டு
பூக்களை போல்...

என்னுள் காதல்
பூக்கள் பூத்தது...

உன் மீது எனக்கு...

கரிசல் கட்டு பூமியாய்
என் உள்ளம்...

அதில் பூக்களாக நீயும்
உன் நினைவுகளும்...

கரிசல் காட்டு
காவியமாய்...

என்றும் என்னில்
வாழுமடி...

உன்னை நினைத்து
என் உயிர்...

என்னை நீ
மறந்த போதும்...

ஜித்தனாக நான்
ரசிகிறேனடி...

தனிமையில்
உன் நினைவுகளுடன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-May-14, 9:43 pm)
பார்வை : 486

மேலே