மாலை சூடும் நாள்

பூ விற்றவளின் முகம்
வாடியது கண்டு வருந்துகிறது
ஒரு பூ மட்டும் கூடையில் ...!

மலர்ந்த பூக்களெல்லாம்
ஏக்கம் கொண்டது கூடையில்
நாளை விடிந்ததும்
யார் யார் நம்மை
சூடிக் கொள்வார்களோ...!

தம் இனம் பார்த்து
ஒவ்வொரு பூக்களும்
பிரியா விடை பெற்றது
வாடிய செடிகளைப் பார்த்து...!

பூக்களெல்லாம் தவம்
கன்னியிடமோ?இல்லை
தாயிடமோ?இல்லை
பாட்டியிடமோ?இல்லை
மாலை சூடும் நாள் பார்க்கும்
முதிர்கன்னியிடம் ...!

எழுதியவர் : தயா (11-May-14, 10:18 pm)
Tanglish : maalai suudum naal
பார்வை : 96

மேலே