அம்மா

தேடினேன் தேடினேன்
தெகிட்டாத சுவையைத் தேடினேன்
அம்மா தந்த அரிசிக் கஞ்சின்
சுவையை தேடினேன்
கிடைக்கவில்லை எந்தனுக்கு!

தேடினேன் தேடினேன்
பாசாங்கில்லா அன்பைத் தேடினேன்
அன்னை அவள் கனிந்தருளும்
அன்பைத் தேடினேன்
கிடைக்கவில்லை என் செய்வேன்!!

தேடினேன் தேடினேன்
காருண்ய விழிகள் தேடினேன்
பெற்றவளின் கரங்கள் தொடும்
அரவணைப்பைத் தேடினேன்
கிடைக்குமோ என் சொல்வேன்!

தேடினேன் தேடினேன்
சுகமான உறக்கம் தேடினேன்
அவள் மடியில் படுத்துறங்கும்
சுகத்தைத் தேடினேன்
பாவியானேன் என் செய்வேன்!

தேடினேன் தேடினேன்
முத்தம் பெற தேடினேன்
அம்மா உன் இதழ் முத்தம் பெற
எங்கும் தேடினேன்
உனை எங்கு நான் காண்பேன்.!

வேண்டினேன் வேண்டினேன்
மீண்டும் பிறக்க வேண்டினேன்
உன் வயிற்று பிள்ளையாக
பிறக்க வேண்டினேன்
பெறுவாயா என்னன்னையே!

நீ தந்த சுவையில்லை அம்மா
நீ தந்த பாசமெங்கே அம்மா
நிம்மதியான துக்கமில்லை அம்மா
தந்தருள்வாய் அம்மா - மீண்டும்
உன் வயிற்றில் பிறக்க வைப்பாய் அம்மா!

எழுதியவர் : ஜவ்ஹர் (11-May-14, 10:29 pm)
Tanglish : amma
பார்வை : 104

மேலே