+வெடிகுண்டா வெடிகுண்டா+

இவன் வேகம் கொண்டவன்..
விவேகம் இல்லாதவன்..
இவன் சதி செய்பவன்..
மதி துளியும் இல்லாதவன்..
இவன் அன்பில்லாதவன்..
ஆனால் அன்பு கொண்டோரை
அழவைக்க தெரிந்தவன்..
இவன் பாசமில்லாதவன்..
ஆனால் பாசமுள்ளோரை
பகிர்ந்துபோட தெரிந்தவன்..
எவனிடம் சென்று முறையிட எண்றெண்ணி
எமனிடமே முறையிட்டேன்..
எமனே!!
உன் முகத்தில் கரி பூசுபவன் முகத்திலே
நீ கரி பூசு!
வெடிகுண்டு வைக்கும் எண்ணம் வரும்முன்னே
நீ வெடி குண்டனைத்தாக்கு!
அவனுக்கே தெரியாமல் உன் பாசக்கயிற்றால்
நீ மாட்டிவிடு தூக்கு...!

குறிப்பு: மீள்பதிவு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-May-14, 9:00 pm)
பார்வை : 111

மேலே