துளிர்விட்ட பட்டமரம்

உயிர் நீத்துப் போன
உணர்ச்சிகளும்
உருவம் பெற்றது.....

பட்ட மரமும்
பாசம் கொடுக்க
பாதை போட்டது ....

பவள பாறையில்
பந்தியிட்டு பரிமாற
விலைபேசப்பட்டது ......

விழுது பழுதான
ஆழ் மனதில்
விதை ஊன்றப்பட்டது .....

சிதைந்துப் போன
சில்லில் எல்லாம்
சிற்றரும்பு துளிர்த்தது ....

சிறகொடித்த
கூண்டு கிளிக்கு
செயற்கை இறகு
பூட்டியதைப் போல
புது உணர்வு பிறந்தது .....

இலக்கின்றி நகரும்
வாழ்கையில்
இரண்டாம் முறை
காதல் உயிர்பிக்குமா ...?

மிச்சம் மீதியின்றி
உயிர் குடித்த
காதல் மீண்டும்
புத்துயிர் பாய்ச்சுமா ....?

வானவில்லாய் மறைந்த
சென்ற வாழ்க்கை
வண்ணமயமாகுமா....?

ஐய்யப்பாடு நீக்கிட
அறியாமை போக்கிட
என் செய்வேன் .......?

எழுதியவர் : ஏழிசைவாணி (16-May-14, 10:31 pm)
பார்வை : 221

மேலே