சூரியனைத் தொழும் சூரியன்
தானாய் விடிவெள்ளி
தோன்றிட வில்லை
தன்னை விதைத்து அவன்
வெள்ளியாய்ப் பூத்தான்
காற்றின் சிறகுகளில்
அவன் மகரந்தம்
கடலலை நாதமும்
அவனது கீதம்
ஆகாய மீன்களுக்கு
இன்றொரு துள்ளல்
தீயின் இதழ்களில்
அவனது சுடரே
மண்ணின் வனங்களில்
அவனது மலர்கள்
மனச்சுவ ரெல்லாம்
அவனெதி ரொலியே
இதயக் கோயில்களில்
அவன் மணியோசை
கிளிகளுக்கும் இன்று
அவன்தான் பாஷை
மலைத்துயர்கள் தாண்டியொரு
மந்திரம் வந்தது - அது
'மோடி மோடி' என
அவன்பேர் சொன்னது.
சூரியனும் இன்று
அவனைத் தொழுகிறது
உலகம் நாளை
பாரதம் தொழுமென்ற
நம்பிக்கை மலர்களைச்
சூடுவோம் வாரீர்..
வாழ்க பாரதம் வாழ்க தாயகம்
வெல்க தாயின் மணித்திரு நாடு...!
(சொந்த அரசியல் உணர்வுகளைப் பாராட்டாமல் ஒரு பொது குடிமகனாக வாகை சூடுவோம்)