என்றுதான் விடியுமோ

தீண்டப் படாத
வண்டினம் தேடும்
பெண் பூக்கள்
முதுவேனில் காலத்தின் இலைகளாய்
நாங்கள் மட்டும்...!

பெண் பூக்கள் பருவச் செடி
தாய்மை செடியில் மலர
எதிர்பார்க்கும் வரன் வண்டினங்களை ....!

மாப்பிள்ளை புழுக்களோ
கால் பதிக்க ஆசைப்படுகிறது
வரதட்சணை புற்றில் ...!

வரம் வாங்கி வந்தவள் அல்ல
இந்த பொன் பாவை பூக்கவில்லை
கோலார் வயலில் ....!

வேண்டியதை கொடுக்க
இந்த பெண் பாவை
நாசிக் நாட்டின் எந்திரமல்ல...!

பொன் பாவையே
வேரை விட்டு வெளியே வா
வரதட்சணைப் புற்றை உடைத்தெடு
முதுமை இருள் சூளுவதற்குள்...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (17-May-14, 7:54 am)
Tanglish : enruthan vidiyumo
பார்வை : 353

மேலே