+சின்ன மீனும் சின்னப் பையனும் ஒரு பாப்பாவும்+

மீனுக்கும் மீனுக்கும் சண்டை வந்துச்சாம்
கடலில் பலநாளா இருமீனும் வம்பிழுத்துச்சாம்
சின்னமீனு பெரியமீன கடிச்சு வச்சுச்சாம்
பெரியமீனு சின்னமீன அடிச்சு வச்சுச்சாம்

ரெண்டுமீனும் வண்டிவண்டியா அழுது வச்சுச்சாம்
அழுதகண்ணீர் கடல்நீர உப்பா மாத்துச்சாம்
உப்புதண்ணிய வாயில்வச்ச பாப்பா அழுதுச்சாம்
பாப்பாஅழுக பார்த்தநாலு மீனு சிரிச்சுச்சாம்

சிரிச்சமீன சின்னப்பையன் பிடிச்சுக் கிட்டானாம்
பிடிச்சமீன ஒருதொட்டியில போட்டு வச்சானாம்
மாட்டிக்கிட்ட மீனுஇப்போ 'சாரி' கேட்டுச்சாம்
சின்னப்பையன் மன்னிச்சதால் கடலில் போயிருச்சாம்

நடந்தகதைய கடலுக்குள்ளே 'ஷேர்' பண்ணிக்கிச்சாம்
'பேஸ்புக்'ல அதுக்குபல 'லைக்' கிடைச்சுச்சாம்
'யூடியூப்'ல வீடியோஎடுத்து ஓட விட்டுச்சாம்
ஒரேநாளில் ஏழுலட்சம் ஹிட்ட எட்டுச்சாம்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-14, 1:53 pm)
பார்வை : 839

மேலே