+புகைப்படக்கருவியின் பார்வையில்+
இன்றைய காலத்தில்
எல்லா இடத்திலும்
கடவுள் இருக்கிறாரோ இல்லையோ
எல்லா இடத்திலும்
நான் கண்டிப்பாக காட்சி தருகிறேன்...
இன்று
தீமை அதிகமாகிவிட்டதோ
இல்லை
தீவிரவாதம் அதிகமாகிவிட்டதோ
இல்லை
அதனைப்பற்றிய பயம் அதிகமாகிவிட்டதோ
எங்கும் எதிலும் நானே நானாய்...
சின்னக்கடை முதற்கொண்டு
பெரியகடை வரை
ரயில்நிலையம் முதற்கொண்டு
விமானநிலையம் வரை
தங்கக்கடை முதற்கொண்டு
பாத்திரக்கடை வரை
பணம்புலங்கும்வங்கி முதற்கொண்டு
பணம்கக்கும் சாதனம் வரை
எங்கும் வியாபித்திருக்கிறேன்....
ஒவ்வொருவராக கவனித்தபடியே...
எவரையும் நல்லவரா கெட்டவரா
எனக்காட்டிக்கொடுப்பதில்
இந்நாட்களில்
என்பங்கு பெரும்பங்கு...
சிலபேர் என்னையும்கூட
கெட்டவனாக மாற்றிவிடுவதுண்டு...
எனவே...
மகளிரே கவனமாக இருங்கள்...
தங்கும் அறைகளிலும்
துணிக்கடைகளின்
உடைமாற்றும் அறைகளிலும்கூட
நான் ஒளிந்திருக்கக்கூடும்...
சில கண்ணாடிகளுக்கு
பின்னாடி கூட
நானிருக்க கூடும்...
தங்கள் விரலால் கண்ணாடியை
தொட்டுப்பாருங்கள்
பிம்பத்தில் இடைவெளி இருப்பின்
அங்கே நானிருக்கிறேன் என அர்த்தம்...
விழிப்புடன் இருங்கள்...
இடைவெளி இல்லையேல்
எனது பங்களிப்பு
அங்கில்லை...
ஏதோ சொல்ல நினைத்தேன்...
ஏதேதோ சொல்லி முடித்தேன்...
என்பணி செய்ய புறப்பட்டுவிட்டேன்...
வருகிறேன்...