மனித விலங்கு
பரிணாம வளர்ச்சி
கண்டு பண்பட்ட போதிலும்
நாய் என்றும்
நரி என்றும்
நால்வகை விலங்குகள்
நம் மனதில்
நாற்காலி போட்டு
கொண்டு
நயவஞ்சகம்
செய்கின்றனவே !
தேனடை போல
தேங்கி நிற்கும் அவ்விலங்கை
தேகம் விட்டு
தேடா தூரம் அனுப்ப
தேசத்தில் சூத்திரங்கள்
ஏதும் உண்டோ ?