பிறந்தநாளில் பிறந்த வாழ்த்து
புன்னகை தேசத்தில்
பூ பறித்தவள் ..
என் மன சுவாசத்தில்
குடி கொண்டவள் ...
பழக்கமில்லாதவர்களிடமும்
பாசம் காட்டுபவள்
பழகிய என்னிடமோ
பண்பு ஊட்டியவள் ...
அவள் அறியாதது யாதுமில்லை
இருப்பினும் ஏதும் அறியாதவளாய்
அறியாமையில் என்னை ஆழ்த்துபவள் ..
விழியோரத்தில் வீரம் தென்பட்டாலும்
விவேகத்தை எனக்கு கைகாட்டியவள் ...
திசை தெரியாத
என் திருப்பங்களையும்
திருப்புமுனையாய் மாற்றியவள் ..
வியந்து நோக்கும் விந்தையவள் .
செவ்விதழ் விரித்து அவள் பேச
ஆசையும் ஆசை கொள்ளும்
நான் எம்மாத்திரம் ....?
வகை அறியாத
வண்ணம் நிறைந்த
வானவில் அவள்
பட்டை தீட்டிய பதுமையில்
பதித்த இரு வைரங்கள்தான்
கண்களோ ...?
ஐயமே ஐயம் கொள்ளும் ...
இத்தனை நாட்கள்
அவளை விட்டு பிரித்து வைத்து
கலகம் செய்த காலத்தை
கைது செய்ய தோன்றுகிறது ..
என் ..
ஒவ்வொரு நாளையும்
புதுமையாய் மாற்றிய
அவள் வாழ்வில்
இன்று திருநாள் ..
ஆம் ..
அவள் பிறந்தநாள் ...
இந்நாளும் எந்நாளும்
வற்றாத நதியாய்
வசந்தம் வீசட்டும் ...
நிலை குலையாத நீரோடையாய்
நீண்ட ஆயுட்காலம் நீளட்டும் ...
வண்ணம் மாறாத
வானவில்லாய் வாழ்வு
வளரட்டும் ...
சிறகு விரித்து
சந்தோசம் சிறக்கட்டும் ...
பசுமை நீங்காத
பல்சுவை ஊற்றாய்
பல்லாண்டு பெருகட்டும் ....
பழமை நீக்கி
புதுமை கூட்டி
இனிமை சேர்த்து
வளமை கோர்த்து
வாழிய வாழிய ...!!!!!!!!!
என் சகோதரியே சபீனா...
தவங்கள் செய்யாமல்
வரங்கள் தந்தவளே ...
தேவை அறிந்து
சேவை புரிந்தவளே ...
பாசம் காட்டி பண்பு பயிக்கும்
பாரதி கண்ட புதுமைபெண்ணுக்கு
பாசமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...!!!!!!!!!!!!!