கல்யாண வைபோகமே
ஏய்.... கிராமத்து குயிலே எத்தனை நாட்கள் உனக்காக நான் தவம் கிடந்தேன் உன்னை கைபிடிக்க...
நான் உன் கரம் பற்ற நீ என் கைபிடிக்க....
வேத சாஸ்தரங்கள் முழங்க நீ என்னுள் கலந்துவிட்டாயடி....
நண்பர்கள் என்னை சூழ என் நண்பனை பார்த்துகொள் உன்னிடம் கூற....
நான் சற்று தடுமாற கைகொடுத்து என்னை தாங்கினாய்....
உன் சுற்றம் அனைத்தும் விட்டுவிட்டு எனக்காக நீ வந்ததாய் நீயே... என் தாரமும் நீயே....
சிந்திய வெண்மணி உனக்குள் முத்தாச்சு....
நீயும் நானும் கலந்தோம்....
ஒன்பது எப்படி உன்னால் ஒரு பாரத்தை சுமக்க முடிந்தது....
காலமெல்லாம் நீதானடி....
வீடு வரை உறவு... வீதி வரை மனைவி....
காடு வரை பிள்ளை..... கடைசி வரை நீதானடி எனக்கு...
நீ சிரிக்கின்ற சிரிப்பில் நான்....
நீ அழுதாலும் நான்தானடி...
நீ பரவசபட்டாலும் நான்தானடி....
போவோம் வா இந்த வையகத்தில்...
வாழ்ந்து பார்போம் இந்த பூமியில்....
என் தேவி கல்யாண வைபோகமே...