பரம பதம்

மனிதர்களின்
வாழ்க்கை ஒரு
பரம பத
மைதானம் தான் ===

வெற்றி எனும்
ஏணியில் ஏறி
சிகரத்தை தொட்டு விட்டோம்
என்ற அகந்தையோடு ஒரு
வினாடி மகிழ என்னும் போது===

தோல்வி எனும்
பாம்பால்
இறக்க படுவீர்கள் என
உணர்த்த
அருகாமையில் பாம்புகள் =====

எற்ற இறக்கங்களை
எளிமையாய் ஏற்று
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது என
யதார்தாமாய் வாழ்ந்து
எண்ணங்களின்
வலிமையால்
வெற்றியையும்
தோல்வியையும்
சமமாய் அனுகும் போது
பெரும் "மன முதிர்ச்சி " எனும்
வெற்றிக்கு
தோல்வி எனும் பாம்பால்
இறக்கம்
என்றுமே இல்லை =========

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (28-May-14, 10:39 pm)
பார்வை : 151

மேலே