காதலித்தேன்
எதிர்ப்புகளை
நான் வெறுக்கிறேன்
எதிர்ப்பில்லாத
நேசம் மலர்வதற்கு..........!
உன்னோடு நான்
கொள்ளும்
நேசம் எதிர்ப்பாகிவிடுமோ
உனது பிரிவினால்
தயங்குகிறேன்..........!
எத்தனை
கஷ்டங்கள் வந்தாலும்
எத்தனை துன்பங்கள்
விழைந்தாலும்
உனக்காக போராடுவேன்
தினமும்
தேரோடுவேன்..............!
உன்னோடு
வாழும் ஒருநிமிடம்
கிடைத்தால் எனக்கு
போதுமடி கஷ்டங்கள்
கரையுமடி..............!
காதலிக்க
கற்கவில்லை உன்னை
காதலித்தேன்
கற்பதில்லை காதலை.........!
யோசித்தாலும்
யாசித்தாலும்
நீதானே தெரிகிறாய்
நீதானே வருகிறாய்
எனது நினைவில்............!
சொல்லாடலில்
நான் சொல்லாமல்
சொல்லுகிறேன்
நீ தான் எனது
சொற்கள் என்று............!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
