ஆசை

என் கணவனாக வரபோகும் என் காதலனே
காலங்கள் உனக்கு எடுதுரைக்கவிருக்கும் -என்
காதலை நானே சொல்கிறேன்
ஒருமுறை கேளடா....
உன்னோடு ஒரு நூற்றாண்டு அல்ல ஓராயிரம் நூற்றாண்டு வாழ வேண்டும் ...
மணல் வீடு கட்டி கணவனும் மனைவியுமாய்
நாம் வாழ்ந்த காலம்
இனியும் தொடர வேண்டும் ....
என் விழிகளின் பாசைகளை நீ வரிகளாய் மொழிபெயர்த்திட வேண்டும் ...
பல கதைகள் சொல்லாத காதலையும் நம்
வாழ்க்கை சொல்லிட வேண்டும்...
பலகுழந்தை பெற்றுக்கொண்டாலும் என் குழந்தை நீ என கூற வேண்டும் ...
சொல்லும் பொருளும் போலே நாம் சேர்ந்து
பல காலம் வாழ்வோம் வா ....

எழுதியவர் : நிஷா (29-May-14, 6:18 pm)
Tanglish : aasai
பார்வை : 79

மேலே