ஏழைநாடா

பட்டுத்துணியும், கட்டு பணமும் கொட்டி கிடக்கிறது........
அதை ஓர் கும்பல்
பொட்டிக்குள்ளே பூட்டி வைத்து பூஜை செய்கிறது.........
ஏழை பாழை பிழைப்பு அற்று
தூக்கம் தொலைக்கிறது.......
மறுபுறம்
வாழை போலே செல்வம் கூடி
தூக்கம் கெடுக்கிறது........
கஞ்சி கூழு மட்டும் உண்டு
பசியை தடுக்கிறது.......
மறுபுறம்
பீட்சா பார்க்கர் எல்லாம் இருந்தும்
பசியோ மறக்கிறது.......
குப்பை தொட்டி போலே வீடு
அதில் குடுத்தனம் நடக்கிறது.......
மறுபுறம்
அரண்மனை போலே வீட்டினை கட்டி
எங்கேயோ வசிக்கிறது.......
வாட்டம் கெட்டு வாடகை இன்றி
ரோட்டில் திரிகிறது
மறுபுறம்
தோட்டம் வைத்து தோரணைக்காக
அதனுள் ரோட்டையே அமைக்கிறது......
இது ஏழை நாடா
பணக்கார வீடா .......?
எண்ணுகையில்
தலையே வெடிக்கிறது. ......