அன்னையின் வரிகள்
என்னுள்ளே வாழும்
உயிரின் கவிதை...
என் வாழ்வுக்கு
அர்த்தம் தந்த
உறவின் கவிதை...
நெஞ்சை
கொள்ளை கொள்ளும்
அழகின் கவிதை ..
உணர்வில் கலந்தோடும்
அன்பின் கவிதை...
உதிரம் கலந்து
உயிரில் திளைத்து
என்
மடியில் துயிலும்
வாழ்வின் கவிதை
"என் குழந்தை " ......