என்னவளே

நீ உன் நுனிவிரல் கொண்டு என்னைத் தீண்டும் ஒவ்வொரு நொடியும் தென்றல் என்னைத் தீண்டுவதாய் உணர்கிறேனடி!
நீ என்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் கவிதைகளாய் மாறுவதாய் தோன்றுகிறதடி!
நீ என்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் மீண்டும் மீண்டும் பிறப்பதாய் உணர்கிறேனடி!
நீ என்னைப் பார்த்து சிரிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனதை வருடும் மெல்லிசை இசைப்பதாய் தோன்றுகிறதடி!
உன் பெயரை எழுதும் ஒவ்வொரு நொடியும் ஆயிரமாயிரம் புதுக்கவிதைகள் படைத்ததாய் என் இதயம் சிலிர்க்கிறதடி!
இதன் பெயர்தான் காதலா சொல்லடி! என்னவளே!