சங்கீத சாம்ராஜ்யம்

சிந்தனைகள் சிறகடித்து பறக்க,

செந்தமிழ் சரளமாக பிரவாகிக்க,

சந்தங்கள் சர, சர வென்று உருவாக

சங்கீதம் சந்தோஷமாக இதழினில் பிறக்க,

சாஸ்திரங்கள், சாங்கியங்கள் அதன் முன்னே தோற்க,

சம்ப்ரதாயங்கள் மலைத்து போய் நிற்க,

சரி, கம, பத, நிச சாம்ராஜ்யம் ஒன்றே ஜெயிக்க,

சிதறாமல் நான் அமைத்த மெட்டு ஒன்று

சீரான ராகத்துடன் இணைந்து, இழைந்து,

சில்லென கேட்பவர் மனதை குளிர வைத்து,

சிகரத்தை தொட்டது, சங்கீதமாகி அந்த மாலை நேரம்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (31-May-14, 11:39 am)
பார்வை : 424

மேலே