விதியின் விளையாட்டு32

ஷிவானியின் இந்த பிரிவு மிக துக்கமாக இருந்தாலும் அவளுடைய இந்த இறுதி முடிவு குடும்பத்தாரை இன்னும் வேதனைப்பட வைத்தது.......

காரணம் தான் இறந்த பிறகு தன் உடலை தன் குடும்பத்தார் கொண்டு செல்லக்கூடாது என்றும் "என் உடம்பிலுள்ள பிறருக்கு உதவும் அனைத்து பாகங்களையும் எடுத்து மற்றவருக்கு உயிர் கொடுக்க வேண்டும்" என்றும் இது தனது கடைசி ஆசை என்றும் குறிப்பிட்டிருந்தாள்......!


இந்த முடிவு பெற்றோரை மட்டுமின்றி குடும்பத்தார் அனைவரையும் நிலைகுலைய செய்தது???????

என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் துடி துடித்தனர்,,,,,

மனோஜ் பிடிவாதமாக இல்லை என் மனைவியின் உடல் எனக்குதான் சொந்தம் யார் பேச்சையும் கேட்கமாட்டேன் என்னுடன் தான் அழைத்து செல்வேன் என்று கத்தினான்...........

மனசாட்சிக்கு விரோதமாக பேசாதிங்க சார் உங்க மனைவியின் ஆசையை நிறைவேற்றுங்கள் என்று ஒருவித நடுக்கமான பேச்சுடன் சொன்னார் அந்த டாக்டர்.....!

சிறிது நேரம் மௌனமாக இருந்த ஷிவானியின் குடும்பம் ஷிவானியின் கடைசி ஆசையை நாமே நிராகரிக்க வேண்டாம் சரி நடக்குறது நடக்குற படி நடக்கட்டும் ஆக வேண்டியதை பார்ப்போம் என்று சொல்லி அந்த பேப்பரில் தானும் கையெழுத்து போட்டார்....????,,,,,,,,

ஷிவானியின் தந்தை மருத்துவரை பார்த்து !!!!!!!!

டாக்டர் எல்லாத்தையும் பார்த்து நீங்களே முடிச்சிருங்க என்று அவரின் கையை பிடித்து அழுதார்......

சரி நான் பார்த்துக்குறேன் நீங்க கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

ரிஷானியின் வீட்டுக்கே மனோஜ் குடும்பத்தினர் வந்திருந்தனர் ரிஷானி மதனுக்கு தகவல் கொடுத்தாள் அவன் எப்படி ஆறுதல் சொல்வது என்று புரியாமல் நான் கிளம்பி வரட்டுமா? என்று கேட்டான்.......

வேண்டாம் என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள் தன் அறையில் உட்கார்ந்து ஷிவானியின் நினைவுகளை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.....!

இறுதியில் நம் அக்காவின் உடலை கூட பெற்றுக்கொள்ள முடியவிலையே விதி இப்படி ஆகிவிட்டதே என்று ஏங்கினாள்.......!
__________________________________________________
மதனின் பாட்டி ஊரில் மாமா பெரிப்பா சித்தப்பா குடும்பத்தினர் பழைய வீட்டிலும் புதிதாக வீடு வைத்தும் வாழ்ந்து வந்தனர்....

மதனின் படிப்பும் முடிந்து வேலைக்கும் தயாரானதால் மதனின் மாமா குடும்பத்தினருக்கு மதனின் குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ளும் ஆவல் இருந்தது.........

மதனின் அப்பாவும் வெளிநாட்டிலிருந்து சம்பாதிக்கிறார் மதனும் நல்ல பையன் வேலைக்கு சேர்ந்ததும் கை நிறைய சம்பாதிக்க போகிறான் அதுவும் இல்லாமல் நம் தங்கை பையன் அதனால் நம் மகளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வான் என்ற தனது முடிவை தன் மனைவியிடம் சொன்னார் மதனின் மாமா வெங்கட்..........!


அவளுக்கும் அந்த குடும்ப பிடித்து போனது!!!!

சரிங்க நம்ம பொண்ணு உமா கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு உங்க தங்கச்சி கிட்ட பேசலாம் என்று யோசனை சொன்னாள்.........
_________________________________________________
ஷிவானியின் இறப்பு ரிஷானி, மனோஜ் மற்றும் சந்துரு குடும்பத்திற்கே ஒரு பேரிடியாக இருந்தது. ஷிவானியின் வீட்டில் அனைவரும் வந்து துக்கம் விசாரித்து விட்டு சென்றனர்......

பூ மொட்டு மாதிரி இருந்த பொண்ணு பூத்த மறு கணம் வாடி பிரிந்து சென்று விட்டாளே என்று ஏங்கினாள் தாய்.

யார் கண் பட்டதோ இந்த குடும்பம் இப்படி நிலை
குலைந்துள்ளது என்று சிலர் வசைபாடினர்.

மேலும் சிலர் நல்ல குடும்பம் சாத்தான் பண்ணுகிற வேலை பாவம் அந்த பொண்ணோட தலை விதி இப்படி ஆகி விட்டதே என்று பேசிக்கொண்டனர்.....!

இவர்கள் பேச்சை அங்கிருந்த அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது திடீரென ஜோசியருக்கு மருத்துவரிடமிருந்து போன் வரவே ஷிவானி வீட்டிலிருந்து மருத்துவரை பார்க்க கிளம்பினார்????????????



விதி தொடரும்.....

எழுதியவர் : ப்ரியா (2-Jun-14, 11:23 am)
பார்வை : 385

மேலே