ஆதலினால் காதலித்தேன் - பொள்ளாச்சி அபி

மதம் களைவோம்... மதம் களைவோம்
என்றே மார் தட்டிக் கொள்வோர் முன்னால்
காதலிலே மதம் களைந்த
காதல் கதை யாரறிவார்??
அந்தக் காதலனும்தான் யாரறிவார்??
ஆதலினால் காதல் செய்தே
அருமை காதலி பிரேமாவை
அன்புக் கரம் பற்றிய பண்பாளர்
அக்பர் என்ற பொள்ளாச்சி "அபி" அறிவீரோ??
பிரேமையினால் பிரேமாவை மணந்து
அக்பரிலே பிரேமாவை கலந்தே
அபி என்றே மாறிய அன்புக் கதையை
எழுத்து நட்பே அறிவீரே... அறிவீரே....
நாளிதழில் நற் சேதி அறிந்தேன்
நற்குடும்ப பூங்கா கண்டேன்
பெருமிதந்தான் கொள்கின்றேன்
அவரன்பிற்கே தலை வணங்குகின்றேன்!!
"ஆதலினால் காதலித்தேன்"
"அபி" காவியம்தான் பெண்ணுரிமை பேசும்
பல தடைகள் உடைத்த உண்மை காதல்
நறுமணம்தான் வீசுதல் கண்டேன்!!!
"ஆதலினால் காதலித்தேன்" காவியத்தை
புத்தகமாய் அரகேற்றம் செய்த
தமிழார்வலர் அகனார் அவர்க்கும்
என் கரம் கூப்பிய நன்றிகள்.. நன்றிகள்..
("சிட்டி எக்ஸ்பிரஸ்" கோவை நாளிதழில் 28-05-2014 அன்று வெளியான, நமது எழுத்து தள நண்பர் திரு பொள்ளாச்சி அபி அவர்களைப் பற்றிய கட்டுரையைப் படித்து எனக்கு எழுத தோன்றியது. உங்கள் அனைவரிடமும் இதனை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உயர்ந்த எண்ணம் உடைய அந்த காதல் மன தம்பதியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இனி உங்களுடைய வாழ்த்துக்களும் அவர்களுக்காகட்டும்)