நங்கையின் கண்கள்

நங்கையின் கண்கள் !!!!
உந்தன் கண்கள் கண்டதுமே
உதிக்கும் கதிரவன் உறைகின்றான்
விந்தை விந்தை இதுவென்று விம்மி புலம்பி தவிக்கின்றான்
புலம்பும் ஆதவன் மொழிகளையே
விளம்ப வந்தேன் கேட்பாயே
இரவு வேலை இன்னுமா தொடரும்
சந்திரன் ஒளியது சில்லெனப் படரும்
இரண்டு சந்திரன் அருகே அமர
தடையும் வந்ததென் வேலையை தொடர
இந்நிலை காரணம் யாரெனக் கேட்க
கதிரவன் சென்றான் மதியினை பார்க்க
மதியும் கதிரவன் கூற்றை கேட்டு
நகைத்தான் சொன்னான் வாயை விட்டு
மதியாம் என் செயல் அதுவன்று
விதியின் மீறலும் இதுவன்று நங்கை ஒருத்தி விழியன்றோ உன் வேலையை கெடுத்தது அதுவன்றோ
கூறி முடித்தான் சந்திரனே
சிந்தை தெளிந்தான் ஆதவனே
சூரிய சந்திரன் சிந்தயையே குழப்பும் கண்கள் கொண்டவளே
எந்தன் சிந்தை குழப்பிடவோ நீ இங்கே வந்தாய் பெண் எனவே
___அருள் ஸ்ரீ____