ரகசியம் சொல்வாயோ

என் உணர்வில் உறங்கும்
உன் உயிரை
தினமும் கண் திறக்காமல்
காண்கிறேன்…

கண் திறப்பின் உன்
உருவம் மறைந்திடுமோ
என்ற பயம்…

மலரும் மலர்களைவிட
உன் முகம் பார்க்க
விரும்புகிறேன்…

அந்த மலர்ச்சி
மலரைவிட உன்
முகத்தில் அதிகமென்பதால்…

மலர்கள் என்றாவது
வாடிவிடும் – உன் முகம்
அதில் இடம்பெறாது…

உன் கண்களின்
இமைகள் தொட
விரும்புகிறேன்…

உன்ன பார்க்கும்போது
என்னை உறையச்செய்யும்
அந்த அதிசியத்தை அறிவதற்காக…

என் வலிமையை
கரையச்செய்யும் அதன்
ரகசியம் மட்டும் சொல்வாயோ..

என் சிந்தனையில்
உன் கண்கள் மட்டும்
மாறாத சிற்பம் ஆகிவிட்டது…

எழுதியவர் : சிவா (3-Jun-14, 9:23 pm)
பார்வை : 143

மேலே