குட்டி ஜோக்
தமிழ் பாடசாலையில் இரண்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம்
சொல்லித்தர ஆசிரியர் வந்தார்
ஆங்கிலப் புத்தகம் இல்லாதவர்கள் எழுந்து நில்லுங்கள் என்றார்
ஒரு பையன் மட்டும் எழுந்து நின்றான்.
உடனே பக்கத்திலுள்ள பையன்
ஆங்கிலப் புத்தகம் வைத்திருக்கிறான்
டீச்சர் என்றான்.
உடனே அந்தப் பையன்
இங்கிலீஷ் புக் தான்
வைத்திருக்கிறேன் என்றான் .
உடனே வகுப்பறையே சிரிப்புக்
களமாகிவிட்டது