ஹைக்கூ எழுதலாம் வாங்க- 13

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

இது எல்லாம் ஒரு ஹைக்கூவா? ஆமாம். இது ஹைக்கூ இல்லைதான். எப்படி ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.

இயற்கையைப் பாடுவது ஹைக்கூ. மானுடத்தைப் பாடுவது சென்ரியூ (இதுதான் ஹைக்கூ, சென்ரியூவின் சுருங்கிய சுருக்கம்).

இதில் மானுடத்தை – மனித மனத்தை – மனித நேயமின்மையை – பகைமையை – சுற்றுச் சூழல் சிதைவை – அண்ணன் தம்பி உறவு முறிவை (நல்ல வேலை ஒருவரை யொருவர் வெட்டிக்கொள்ள வில்லை ) – கிராமத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வை மேற்கண்ட கவிதை பாடுவதால் அது சென்ரியூ.

மரத்தைக் வெட்டாமல் காத்திருந்தால் அது ஹைக்கூ.

வெட்டியதால் அது சென்ரியூ.

பங்காளி நிலத்தில்
விழும் நிழல்; வெட்டினான்
மரக்கிளைகள்

மேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும். சரி… எங்கே நீங்கள் ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதுங்களேன். (வரும் வாரம் வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் – என் கவிதையில் மரம் வளர்கிறது – மீண்டும் வெட்டவும் படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது.)

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (6-Jun-14, 7:46 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 145

மேலே