நாய்
நாய்!
மனிதன் நேசிக்கும் மனிதனை நேசிக்கும்
ஓர் நாலு கால் நல்லவன்!
நாய்!
வால் ஆட்டி வாஞ்ஜையுடன் முகரும்
ஓர் வள் வள் பிராணி!
நாய்!
நன்றியை உடலாய் கொண்ட உண்மை ஊழியன்!
உரியவரின் உயர் காவலன்!
நாய்!
குரைக்கும் துரத்தும் கடிக்கும் ஆனால் நடிக்க தெரியாத நல்ல பிராணி!
நாய்!
மனிதன் வேட்டையில் நாட்டம் கொண்ட போது நல் துனணயாய்!
துணிந்தவனாய்!
வீட்டில் இருந்த போது காவலனாய்! சேவகனாய்!
செய் நன்றி நாயகனய்!
நம்முடன்
வாழும் நாயை தயை காட்டி
தாயுள்ளம் பேணுவோம்!
நன்றி?