முயற்சிகள் தோற்பதில்லை

நீ ,
முயற்சிகளால்
முட்டிப் பார்,
சிறு விதை முளைத்து
பெரும் பாறையும்
பிளவுருவதுண்டு //
காலத்துடன்
மோதிப் பார்,
அலைகடல் வழிவிடும்
ஆழியில் முத்தெடுக்க //
கடினமான ஆரம்பத்தின்
முடிவில் அந்தக்
காற்றிலும் கால் பதிக்கலாம் //
சிறு சிறு சரிவுகளினால்
பயம் கொள்ளாதே
முட்களுக்கு அஞ்சி
ரோஜாக்கள் மலர
மறுப்பதில்லை //
விடாமுயற்சி உன்
துணையானால் வெட்டிய
விறகிலும் நாதமிசைக்கலாம் //