நான்
சிறகுகள் இருந்தால்...!
பறந்திடுவேன்
சிலுவையில் அறைந்தால்
உடைத்தெறிவேன்
சிறுமையை கண்டால்
கொதித்தெழுவேன்
சிறை போக யாரிடமும்,
நான் மறுத்திடுவேன்
சினம் கொண்ட மனிதரை,
தூரத்தில் நிறுத்திடுவேன்
சில நேரம் நான்
மழலையாக மாறிடுவேன்
சின்ன, சில ஆசைகளை
எனக்குள்ளே கொண்டிருப்பேன்
சிலை போல மனம் நெகிழ்ந்து
இறை முன்னே அமர்ந்திடுவேன்
சிந்தனையில் தடுமாற்றம் ஏற்பட்டால்,
அதை சீர் செய்திடுவேன்
சிற்றெறும்பிடம் சுறு, சுறுப்பை
நான் கொஞ்சம் கற்றிடுவேன்
சிறிதொரு உதவி
செய்தாலும் யாரும்,
கைம்மாறு செய்திடுவேன்
சிலந்தியின் வலைக்குள் சிக்கிடும்,
பூச்சியை காத்திடுவேன்
சிட்டு குருவிக்கு கொஞ்சம்
தானியங்கள் உணவாக்கிடுவேன்
சித்திரம் வரைந்து எந்தன்
உணர்ச்சியை வெளியிடுவேன்
சிற்பங்கள், அதன் நுட்பங்கள்,
இதனை கண்டு விட்டால்
மலைத்து நின்றிடுவேன்
சிறிதேனும் அன்பை
யாரேனும் தந்து விட்டால்,
அவரிடம் சரணடைந்திடுவேன்