நிறைவேறாத ஆசைகள்

நான் ---
சூரியனை போன்று
ஒளிவீசிட விரும்பினேன் ...

நான் ---
மலர்களை போன்று
மணம் பரப்பிட விரும்பினேன் ...

நான் ---
வண்ணத்துபூச்சி போன்று
வண்ணமயமாய் மாறிட விரும்பினேன் ...

நான் ---
தேனீயை போன்று
சுறுசுறுப்பாய் வாழ விரும்பினேன் ...

நான் ---
காகத்தை போன்று
பகிர்ந்துண்ண விரும்பினேன் ...

ஆனால் ---

என்
விருப்பங்கள் யாவும்
என்னை போலவே
நிறைவேறாது போயின...

என்
கூக்குரலும் கெஞ்சுதலும்
அவர்கள்
சிந்தையை எட்டவேயில்லை ...

கதறியழுதும்
என்னை
காப்பாற்றி கொள்ள
தெரியவில்லை ...

என் ஆசைகளின்
எச்சத்தோடு
என் உடலின்
மிச்சமும்
மண்ணோடு
மட்கி போயிற்று ------

சிசு கொலை !!!!!

எழுதியவர் : த.ராமிஷா (11-Jun-14, 9:38 pm)
பார்வை : 453

மேலே