பகலிலும் இரவு
பகலிலும் இரவு
----------------------
இரவு நினைத்தாம்
பட்டப் பகலிலும்
ஆதவன் ஒளியிலும்
தன் ஆதிக்கம்
நீங்கா நிலைத்திட
கல்லில் புகுந்து
கறுங் கல்லாய்
பறவை இனத்தில்
குயிலாய் காகமாய்
மலர் சோலையிலே
பெரிய கறு வண்டாய்
இரவு நீடித்ததாம்
இன்னும் சொல்லபோனால்
கோடையிலே அந்த
கத்திரி வெய்யலிலே
வயல் எல்லாம்
காந்தி பூத்து
கதிரவனை ஆர்பரிக்க
அங்கும் வயல் நடுவே
நாவல் மரம் உதிர்த்த
கறு நாவர்ப் பழமாய்
தரையில் படர்ந்து
கொக்கரித்தது இரவு !
பகலிலும் இரவாய் !