முதல் இரவு
என்னை அனைத்துக்கொள்
என்னை அனைத்து கொல்
என் வெட்பத்தை அனைத்துக்கொள்ள
இன்னொரு முறை என்னை அணைத்துக்கொள்
கொத்தும் விழியால் கூறுபோட்டு
குத்தும் மார்பால் துளைபோட்டு
என்னை அனைத்துக்கொள்
என்னை அனைத்து கொல்
நீ இறுக்கி அனைப்பதால்
இதயம் இடமாறட்டும்
இன்றோடு என் உயிர் போகட்டும்
என்னை அனைத்துக்கொள்
என்னை அனைத்து கொல்
வேறோடு என்னை பிடுங்கி
மார்போடு அனைத்துக்கொள்
உதடோடு உதடு வைத்து
உயிரையும் உறிஞ்சி கொள்.
இருட்டில் நான் எடுத்த புதையலே
புதைத்தால் என்னை சதையின் நடுவிலே
நேற்று வரை உடை போட்டு மறைத்தாய்
இன்று உடையாக என்னை உடுத்தி
உயிரையே பறித்தாய்.
கவிதையாக கண்டேன்
கனியாக தந்தை
சுமையென்றலும்
சுகமாக இருந்தாய்
உன் கையில் நான் விளையாட்டு பொம்மை
ஆசை தீர விளையாடு
அலுக்கும் வரை விளையாடு
இரவெல்லாம் விளையாடு
உறவாக விளையாடு
உன் கூந்தல் பூக்கள் கூட எனக்கு பாரம்
உன் குங்குமம் என் முகத்தில் அரிதாரம்
கட்டிலில் வேண்டாமடி கலவரம்
காலையில் காயங்கள் சொல்லிவிடும் நிலவரம்
வேண்டாமடி வேறொரு வரம்
வேண்டுமடி இதுவே இன்னொருதரம் .