ஒட்டார் உடனுறைவின் கண் - ஆசாரக் கோவை 43

உச்சியம் போழ்தோ டிடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண். 43 ஆசாரக் கோவை

பொருளுரை:

பகல் உச்சிப் பொழுது, நடுஇரவு, காலை, மாலை,

பெருமைமிகு சிவன் விஷ்ணு ஆகிய இரு கடவுளர் நாட்களாகிய ஆதிரை, ஓணம்,

அமாவாசை, பௌர்ணமி நாட்கள்,

அட்டமி (பௌர்ணமி, அமாவாசை இவற்றின் பின்வரும் எட்டாவது நாள்),

தாம் பிறந்த நாள் ஆகிய நாட்களில் தம் மனைவி யரோடு உடலுறவு கொள்ள பொருந்தாத நாட்களாகும்.

கருத்துரை:

நடுப்பகலிலும் நள்ளிரவிலும் மாலையிலும் காலையிலும் திருவாதிரையிலும் திருவோணத் திலும், அமாவாசை பௌர்ணமியிலும் அட்டமி யிலும் பிறந்த நாளிலும் கலவியாகாது.

"பிறந்தநாள் இவ்வெட்டும்" என்றும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jun-14, 8:13 pm)
பார்வை : 99

மேலே