எங்கோ போனாயடி

இதயம் இங்கு
இருளின் பிடியில்
ஒளிதேடி ஓளமிடுகிறது...

ஒளிந்து கொண்டாய்
இருள் மேகங்களின்
பாதுகாப்போடு...

உன் நிழலை மட்டும்
தேடுகிறேன்....

மின்மனிப்பூச்சிகளின்
உதவியோடு...

என்னோடு நீ
நடத்திய கவிப்போர்
மீண்டும் தொடராதா...

தொடர்ந்தால்
இம்முறை நானே
தோற்றுப்போகிறேன்...

உன் இதழ்கள்
என் தோல்வியை கண்டு
மலரும் என்றால்...

நம் உறைநடைகள்
துண்டித்தபோது உன்
நிழல்படங்கள் மட்டும்தான்
என்னிடம் பேசியது...

என் கேள்விகளுக்கு
பதில் ஏதும் சொல்லாமல்...

என்வீட்டு ரோஜாக்களும்
மௌனவிரதம் கொள்கிறது
என் வார்த்தைகளில் வலுவில்லாததால்...

நான் உன்னை தொலைத்துவிட்டேன்
என்ற காரணம் சொல்லவா..?

மாட்டேன் சொல்லமாட்டேன்
அவைகளின் கண்ணீர் பார்க்க
எனக்கு தைரியமில்லை...

தினமும் சுமைகளோடே
எழுகிறேன்...

என்றாவது ஒரு நாள்
ஒரு நொடிகளாவது உன்னோடு
பேசிவிடமாட்டேனா...

காத்திருக்கிறேன் அந்த
ஒரு நொடிகளைக்காக......

எழுதியவர் : சிவா (15-Jun-14, 1:23 pm)
பார்வை : 225

மேலே