ponvandu

பொன்னில் பிற வண்ணமும் கொண்டு,
விண்ணில் பறந்தது ஓர் பொன்வண்டு!
பூக்கள் விடும் தூது கண்டு,
பனிமலரில் மயங்கியது தேனுண்டு!

மலருக்கு அழகா பொன்வண்டு?
வண்டுக்கு அழகா பூச்செண்டு?
வண்டையும் மலரையும் நான் கண்டு...
சிலையாகி நின்றேன் கட்டுண்டு !

உண்மை ஒன்று இதில் உண்டு ,
வண்ணமும் அழகும் திரண்டு...
பூவும் பொன்வண்டும் சேரக் கண்டு,
மலர்வாள் பூமிப்பெண் ,வசந்தமெனும் பருவம் கொண்டு !

கண்பட்டால் மறையும் அழகென்று ,
வைத்தானோ இறைவன் கரும்புள்ளிகள் அன்று !
கூறுவாய் ,பொன்வண்டே! என்னிடம் இன்று..
உன் அழகின் ரகசியம் இதுவே என்று!

எழுதியவர் : meenatholkappian (16-Jun-14, 8:41 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 438

மேலே