முயற்சி, முயற்சி, முயற்சி

முயற்சி, முயற்சி, முயற்சி

எழுச்சி கொள்ளும் வரை
முயற்சி...

வெற்றி சந்திக்கும் வரை
முயற்சி

விளைச்சல்கள் வரும்
வரை முயற்சி

விரிவுகள் ஏற்படும்
வரை முயற்சி

பாதைகள் தெரியம்
வரை முயற்சி

பயணங்கள் முடியும்
வரை முயற்சி

பட்டங்கள் பெற்றிடும்
வரை முயற்சி

காரியங்கள் கூடும்
வரை முயற்சி

காதலி சிரிக்கும் வரை
முயற்சி

கடமைகள் காப்பதில்
முயற்சி

வறுமையை அழிப்பதில்
முயற்சி

வருத்தங்கள் துடைப்பதில்
முயற்சி

ஏணியின் மேல் ஏறிட
தீராத முயற்சி

ஏறிய இடத்தினில் நிலைத்திட
முயற்சி

எங்கும், எதிலும் முயற்சி
மனம் தளர்ந்திடாத,
நடுவில் சோர்ந்திடாத
கடின முயற்சி

முயற்சியுடையோர், இகழ்ச்சி
அடையார், பழமொழி இது

பல சாமான்யர் அனுபவித்து
அறிந்த உண்மை இது

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (21-Jun-14, 7:35 am)
பார்வை : 79

மேலே