நியமனம்
![](https://eluthu.com/images/loading.gif)
அய்யா கடந்த ஆண்டு வரைக்கும் பிரபல நடிகரா இருந்தீங்க நீங்க. எப்படியும் கோட்டையிலெ முதல்வர் நாற்காலிலெ உட்காரனுன்னு புதுசா கட்சி ஆரம்பிச்சிரிக்ங்க. நீங்க தான் கட்சியின் நிரந்தரத் தலைவர்ன்னு சொல்லீட்டீங்க. கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட கட்சியிலெ எல்லாப் பதவிகளுக்கும் யாரையும் இன்னும் நியமிக்காமலெ இருக்கீங்க? அதுக்கு என்ன காரணம்.
அதுவா? ஒரு துப்பறியும் நிறுவனத்திடம் சொல்லி தமிழ் நாடு முழுவதும் ஒரு சர்வே பண்ணச் சொல்லி இருக்கேன். என் ரசிகர்களிலெ யார் யார் எனக்கும் கட்சிக்கும் நெறைய செல்வு பண்ணி சுவரொட்டி, கட் அவுட், பேனர் மற்றும் திரை அரங்குகளில் ஸ்லைடு விளமபரம், செய்தித் தாள்களில் விளம்பரம் எல்லாம் செய்கிறார்கள் என்பதப்பத்தி எனக்குஆதாரப் பூர்வமான தகவல் வந்ததும் எல்லாப் பதவிகளுக்கும் என் இரசிகர்களின் தகுதிக்குத் தகுந்த மாதிரி பதவி வழங்க உள்ளேன்.
நல்ல முடிவு அய்யா.