சுற்றி வந்து பகைவர் உன்னை நடுங்க செய்திடினும்

சுற்றி வந்து பகைவர்
உன்னை நடுங்க
செய்திடினும்

வெற்றி வந்து உன்னை
சூழும் என்ற எண்ணம்
மனதில் வளர்த்து
கொண்டிடு

கற்றறிந்த அறிஞர்
சொல்லும் அறிவுரை

பயம் தான் உந்தன்
முதல் எதிரி, பயம்
விடுத்தால் நீ வெல்வது
உறுதி

தைரியம் நிறைத்து,
வீறு கொண்டு எழுந்திடு
அடைந்திடுவாய் வெற்றியே

நடந்திடுவாய் அதன் வழியே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (24-Jun-14, 2:22 am)
பார்வை : 46

மேலே