கள்ளத்தனம் ஏனோ கண்மணியே

கள்ளத்தனம் ஏனோ கண்மணியே

சுட்டித்தனம் தனம் குறைத்திடு
சீக்கிரமே அன்னையிடம் சேர்ந்திடு

எட்டி வந்து அவளை அணைத்திடு
கட்டி உன்னை பல முத்தம்
தந்திடுவாள்

சூழ்நிலைகள் அனைத்திலுமே
கண்டிடுவாள் உந்தன் குறும்பினையே

அன்னை அவள் ஏங்குகின்றாள்
கண் மூடியும் உன்னை காணுகின்றாள்

கை நீட்டி பிடிக்கின்றாள், நீ
கை நழுவி ஓடுகின்றாய்

உந்தன் பிள்ளை மழலை கேட்டிடவே
நாள் முழுதும் காத்திருக்கின்றாள்

உந்தன் பிஞ்சு கைகள் தொட்டிடவே
கன்னத்தை காட்டுகின்றாள்

தன் நெஞ்சில் உன் நினைவுடனே
நொடிகளெல்லாம் கழிக்கின்றாள்

கண்ணில் உன் முகம் பட்டதுமே
மன சோகமெல்லாம் மறக்கின்றாள்

கள்ளத்தனம் ஏனோ கண்மணியே
அவள் கையில் நீ சிக்கிடு, சீக்கிரமே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (24-Jun-14, 2:35 am)
பார்வை : 58

மேலே