பசி

பசி என்ற உணர்வு
இல்லாவிடில்
எதுவுமே இல்லை
இவ்வுலகில்

உழைப்பு தேவையில்லை
உணவு தேவை இல்லை
உற்பத்தி தேவை இல்லை
பணம் தேவை இல்லை
பதவி தேவை இல்லை

தேவையே தேவை இல்லை

தேவைக்கு மீறி பணத்தை
சேமித்து வைக்க வழி உள்ள உலகில்
பசிக்காதபடி உணவை வயிற்றில்
சேமித்து வைக்க வழி செய்யாத
இறைவனை என்ன சொல்ல?

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (24-Jun-14, 9:58 am)
Tanglish : pasi
பார்வை : 94

மேலே