நாளையும் முதுமையும்

..."" நாளையும் முதுமையும் "" ...

நன்கு கற்றுக்கொண்டவர்
பின்பு கற்றுக்கொள்வார்
கல்வி கூடங்களை அவர்
கடந்து வந்த பிம்பும்
வாழ்க்கை இதுவென்று
வையகத்தின் நிலைதனை
இளமையின் துடிப்பும்
வயோதிகத்தின் தவிப்பும்
வாழ்விலோர் அங்கமே
வருவதும் வராததும்
இறைவனின் நாட்டம்
வருவதை எண்ணித்தான்
வாழ்க்கையின் ஓட்டம்
நாளையும் முதுமையும்
நமக்கும் வந்துவிடும்
சிந்தித்தே நாமத்தை
செயல்படல் வேண்டும்
இளமையின் பயிர்ப்பு
முதுமையில் அறுவடை
காலம்தான் சொல்லிடும்
விளைவது வினையா
விருச்சத்தின் முளையா
குருதி சிலிர்த்த காலத்தில்
கூட்டி சேர்த்து வைத்ததே
நாடி தளர்ந்த தருணத்தில்
நடைமுறைக்கு அமுலாகும்
வற்றிவிட்ட ஓடையிலே
ஓட்டை படகாய் மூழ்குவதும்
அன்பெனும் சமுத்திரத்தில்
ஒய்யாரமாய் மிதப்பதும் ,,,,


என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (24-Jun-14, 5:46 pm)
பார்வை : 43

மேலே