சிந்திக்க மறந்த சீர்திருத்தவாதிகள்
..."" சிந்திக்க மறந்த சீர்திருத்தவாதிகள் ""...
குழந்தையாய் இருந்திருந்தால்
குழப்பங்கள் ஏதுமில்லை
குணமிழந்த மனிதத்தாலே
குற்றங்களும் கூடுதிங்கே
நாம் அறியாத வயதினிலே
தெரியாதேனும் சொன்னதில்லை
ஒருவன் இனம் நிறம் பற்றி
எல்லாமிங்கு அறிந்ததும்
அறிவு பெற்ற ஆணவத்தால்
இன்று தன்னைத்தானே
அழித்துக்கொள்ளும் அறிவுள்ள
அறியாமை மானிடனாய்
தன் புறத்தை பார்வைக்காய்
தூய்மைபோல் வைத்துக்கொண்டு
அகத்தில் அழுக்கை நிறைத்து
அகம்பாவத்தில் வாழ்கிறான்
அழிந்துவிடும் ஆன்மாவிற்குள்
இந்த அகந்தைதான் எதற்கு
அன்பினை உணர்ந்துகொள்ளா
அரங்கத்தில் பேசுகிறான்
இவ்வையகத்தின் அமைதியென்றும்
உதவிடும்யெம் கரங்களேன்றும்
கரவோசை நெகிழ்ச்சிக்காய்
கர்ஜிக்கும் சிங்கமென
வனங்களிலும் வாழ்ந்திட
தகுதிதனை இழந்தவர்கள்,,,,
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

