ரசிகையும் நீதானே -நாகூர் லெத்தீப்

பார்க்காத நேசம்
நான் உணரவில்லை
அடியே உனை
கண்டேன் உணர்ந்தேன்
ஒருகணம்............!

எனது ரசனையும்
நீதானே எனது
ரசிகையும் நீதானே
பிறகு எதற்கு
எனை சாடுகிறாய்
விளையாடுகிறாய்......!

உன்னை
தீண்டாமல் இருக்க
நீ எனை
அனுமதிப்பாயா
நீயே சொல்..........!

உன்னை தேடும்
எனது விழிகள்
வழிமை
இழக்கிறது கண்ணீர்
வடிக்கிறது...........!

என்னுள்ளே
வாழ்பவளே
எனது இதயத்தை
பரித்தவளே சொல்வாயா
உனது காதலை...........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (25-Jun-14, 1:27 pm)
பார்வை : 71

மேலே