சிவந்த கைகள்
சிவந்த
கைகளுக்குள்
சம்பளத்
திணிப்பு.....
மனசில்
ஆயிரம்
கணிப்பு....
வலிகள்
நீங்கினாலும்
வடுக்கள்
மறையவில்லை....
கை நிறைந்த
செல்வம்
வந்தாலும்
கண்மூடி
திறக்கும்
முன்பே
காணமல்
போகுதே
தேவைகள்
தீராமல்......!?
கூலிக்கு
மாரடிக்கும்
கூட்டம்
நாம்....குறைந்த
விலையில்
போலிப்
பொருட்களை
கொண்டு
சேர்க்கிறோம்.....!?
பாதையோர
பெட்டிக் கடைகள்
அன்பாய்க்
கூப்பிடுது.....
ஆகாசம்
தொட்ட கடைகள்
எல்லாம்
என் உழைப்பைப்
பிடுங்குது.....!?
ஏழைக்கு
ஏனிந்த
ஆசை....கூழுக்கும்
கஞ்சிக்கும்
கும்பிடு
போடும்
நமக்கு....குறுக்கு
வழி தெரியாமல்
நேர்வழி
சென்று
உள்ளதைக்
கொண்டு
நல்
உள்ளதோடு
உலாவருவோம்
உலகம்
சுற்றி......!!!