படித்து திரட்டிய நகைசுவைகள்

1.அப்பா, தாய் சொல்லைத்தட்டாதேன்னு பழமொழி இருக்கு! ஆனா, தாரம் சொல்லை தட்டாதேன்னு பழமொழி ஏன் இல்லை?
ஓ.. அதுவா! எதை நாம செய்ய மாட்டோமோ அதுக்கு மட்டும் தான் பழமொழி இருக்கும்.

******
ஹசன் பருக்


2.லோ பட்ஜெட் படம்னு சொல்றீங்க! ஆனா கதாநாயகி வீட்டுல சமையல் காஸ் சிலிண்டர் வந்து இறங்குது. அவங்க காய்கறி வாங்கி சமையல் பண்ற மாதிரி எல்லாம் சீன் வருதே?

****
புளியரை கணேசன்.


3.இந்தா இந்த முகமூடியை போட்டுக்கோ!
முகமூடியா எதுக்கு?
பின்னே! நான் எப்ப திருட வந்தாலும் இப்படி பஞ்சப்பாட்டு பாடறதுக்கு பேசாம என்னோட வந்து சேர்ந்துக்கலாம்.
*******
ஆர். அப்துல் சலாம்.


4.போலீஸ்காரங்க பத்துபேர் சேர்ந்து ஒரு நாடகம் போட்டாங்கன்னு சொன்னீங்களே.. நாடகத்துக்கு பேர் என்ன?
மாமூல் வாழ்க்கை!

********
லட்சுமி ஆவுடை நாயகம்.


5.டாக்டர்! காதுகுடையுது.. மூக்கு அடைச்சிருக்கு! தொண்டையில புண்ணு!
உண்மையை சொல்லுங்க! நான் நெஜமாவே ஈ.என்.டி டாக்டாரான்னு செக் பண்ணத்தானே வந்திருக்கீங்கே?
*******
பாஸ்கி.

எழுதியவர் : முகநூல் (26-Jun-14, 3:39 pm)
பார்வை : 101

மேலே