படித்து திரட்டிய நகைசுவைகள் 02

6.இவர்தான் உன் காதலரா?
எப்படி கண்டுபிடிச்சே?
உன்னை பக்கத்துலே வச்சிகிட்டு உன்னை தவிர மத்த எல்லா பொண்ணுங்களையும் ரசிக்கிறாரே!

**************
அம்பை தேவா.


7.அம்மா தப்பா நினைக்காதீங்க! நம்ப ஐயா எப்படி?
சே! தங்கமானவரு.. என்னையே நிமிர்ந்து பார்க்கமாட்டாரு! கவலைப்படாதே!
மன்னிக்கிச்சுங்க அம்மா! அப்ப இந்த வீடு எனக்கு சரிப்படாது!

*****************
கே.வி.


8.உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை! ஒரு நாலு நாளைக்கு!..
ஐயையோ! அடுத்த நாலு நாள் ஆபீஸ் லீவாச்சே! என்ன பண்ணுவேன்?!

**************
பாஸ்கி.


9.ஏர் போர்ட்டில் என்ன கலாட்டா?
யாரோ ரன் –வே முழுக்க வரட்டி தட்டி வச்சிருக்காங்களாம்!

*************
வி.வைத்தியநாதன்.


10.என்னது உங்க தாத்தா உனக்கு சொத்துல ஐநூறு ரூபாத்தான் எழுதி வச்சிருந்தாராமே?
நான் கொடுத்து வச்சது அவ்வளவுதாண்டா!
என்னது அதுவும் நீ கொடுத்து வச்சதுதானா?!!
***********
ச.ரவிகுமார்.

எழுதியவர் : முகநூல் (26-Jun-14, 3:41 pm)
பார்வை : 90

மேலே