இலக்கணப்பிழை

ஒரு
கவிதையின் இலக்கணத்தோடு
உனதழகைப்பற்றி
எழுத முனைந்தேன்
உனதழகின்
இலக்கணத்தோடு
கவிதை தன்னை
எழுதிக்கொண்டது

=====================

நீ
இல்லத்தரசி
ஆகும் முன்பு
என்
இதயத்தரசி
ஆகிவிடு

=====================

உன்னைப்
பொருத்தவரை
உனது நிறம்
மாநிறம்
என்னைப்
பொருத்தவரை
உனது நிறம்
மாஆஆ ஆ நிறம்


=====================

நாம்
பார்த்துக் கொள்ளும்
போதெல்லாம்
இமைகளால்
படபடக்கிறாய்
நீ
இதயத்தால்
படபடக்கிறேன்
நான்

=====================

வார்த்தை என்ற
வாகனம்
எனது வாய்க்குள்ளேயே
பம்மிக்கொண்டிருக்கிறது
உனது கண்கள் எனும்
செக் போஸ்ட் கண்டு

=====================

எனது
நகைச்சுவை என்ற
பட்டாசுகளுக்கு
உனது சிரிப்புதான்
தீபாவளி

=====================

உனது முகம்
என்ற உலகத்தில்,
புன்னகை என்பது
அதிகாலை
சிரிப்பு என்பது
முற்பகல்
முறைப்பு என்பது
உச்சிப்பொழுது
மௌனம் என்பது
அந்தி
சோகம் என்பது
இரவு
இப்போது
அந்த உலகத்தில்
அதிகாலை என்று
நினைக்கிறேன்

=====================

உனது கண்கள்
கேட்கும்
அத்தனை கேள்விகளுக்கும்
என்னிடம்
ஒரேயொரு
விடைதானிருக்கிறது

=====================

உன்னைப்பற்றி
நானெழுதிய
எப்பேர்பட்ட கவிதைகளையும்
ஒரே புன்னகையில்
வீழ்த்தி விடுகிறாய்
நீ

=====================

அழகைக்கெடுப்பது தான்
ஒரு தெற்றுப்பல்லின்
இலக்கணம் என்றால்
உன்னைப் பொருத்தவரை
அது
இலக்கணப்பிழை

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (27-Jun-14, 7:00 pm)
பார்வை : 180

மேலே