கருத்தென்னும் பிதற்றல்

பிறைமதி பேதையர்
பிதற்றல் கருத்தாமோ?
கவி உரைத்து
காலட்சேபிக்க
வழிமறந்து
கருத்துரைத்தே
அடையாளம் தேடும்
மனிதர்_குணம்
விந்தையின்றி ்
வேறென்ன?
கரைகானா சிற்றறிவு
நுரை குமிழ் போல்
நெடு நேரம்
நீடிப்பதில்லை
மெத்த படித்து
மேதினியில்உளவுபவர்
பிறர் குற்றம் காண்பதற்கு
பிறவி ஏதும் எடுப்பதில்லை
அரை குறை அறிவு கொண்டு
அங்குசமே தான் தானென்று
அழிசாட்டியம் செய்யும்
அகம்"பாவி"
அதி புத்திசாலிகளை
என்னென்று சொல்ல...?