போதமாய் நின்ற பொருளுக்கு

"யாதுமாகி நின்றாய்" - பாரதி

என்னுள்ளே நானாய்..
நான் எனும் பொருளாய்
பொருளில் மறைந்த பொருளாய்...
நிறைந்த நிறைவே!!!

வேறோர் உயிரிலும்
உயிராய்
எல்லாம் ஒன்றாய்!!
ஒருமையின் பன்மையாய்...
பன்மையில் ஒருமையாய்...
நீயன்றி அல்லாத நிலையாய்
கருவாய் ஆனா கருப்பொருளே!!!

என்னுள் இருக்கும் இருப்பில்
இருப்பின் இயக்கமாய்...
இயக்கத்தின் இலக்காய்...
இலக்கின் இலக்காய் இருப்பாய்!!!

"எங்கும் நீ நிறைந்தாய்" - பாரதி

நீயில்லாத இடம் எங்கே???!!!
நீ இல்லை என்னும் நிலையிலும்
நிலைத்து நிற்கும் நிறைவே....

"தீது நன்மையெல்லாம் தெய்வ லீலையன்றோ!!!" - பாரதி

தீதும் தீர்வும் நீயே!!!
நன்றும் பொருளும் நீயே!!!
நஞ்சும் அமுதும் நீயே!!!

"பூதமைந்தும் ஆனாய்...பொறிகளைந்தும் ஆனாய்!!!" - பாரதி

எங்கும் பரவிய ஆகாயமாய்...
அண்டத்தின் போர்வையாய் போர்த்திய பொருளே!!
விசும்பின் விழியில் கனன்றிடும் கனலே...
கனலின்கண் கனன்ற புனலே...
புனலை புணர்ந்த காலே...
காலின் கால் பதித்த புவியே!!!

புவியில் பூத்த உயிரே..
உயிரில் மலர்ந்த உணர்வே...
காட்சிகளாய்,
காட்சிகளின் சாட்சிகளாய்..
சப்தமாய்,
சப்தம் படர்ந்த நிசப்தமாய்.
வாசம் கடந்த வாசமாய்...
வசமாய் நின்ற
சுவையாய்...
சுவையின் நல்லுணர்வாய்...
உணர்வில் உதித்த
போதமே...
போதம் கடந்த போகமே!!!
பொறியினை விஞ்சிய பொருளே!!!

பொருளைக் கடந்த பொருளான உனக்கு...
இந்த சிறு பொருள்!!!
உன்னில், உன்னால் உதித்த உயிர்
உனக்கே அவிர் ஆகின்றது!!! - சௌந்தர்

எழுதியவர் : சௌந்தர் (28-Jun-14, 10:27 pm)
பார்வை : 171

மேலே